இந்திய பிரஜை லண்டலில் கின்னஸ் சாத‌னை!


11/13/2009 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மன்ஜித் சிங். இவர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் தனது தலைமுடியால் இரட்டைத் தட்டு பஸ் ஒன்றைக் கட்டி இழுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

மன்ஜித்சிங்குக்கு 59 வயதாகிறது. இவர் நேற்று மத்திய லண்டன் பேட்டர் ஸீ பார்க்கில் கின்னஸ் அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் 7 தொன் எடை கொண்ட வின்டேஜ் இரட்டைத் தட்டு பஸ்ஸைத் தனது தலை முடியில் கட்டி 21.2 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை குறித்து மன்ஜித் கூறுகையில்,

"பஸ்ஸைத் தலைமுடியில் கட்டி இழுக்கும் போது வலித்தாலும், வேதனை சாதனைக்காகத்தான் என்று நினைத்த போது அது மறைந்து விட்டது" என்றார்.

-வீரகேசரி இணையம்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv