வாராந்தப் பழமொழிகள்

காலம் என்பது மிகச்சிறந்த மூலதனம் என்ற நூலில் இருந்து..

01. பூமியில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் காலம் நிச்சயமற்றது, வரையறுக்கப்பட்டது என்று புரிந்து கொண்டு அதைச் சாத்தியமான எல்லா வழிகளிலும் பயன்படுத்து.

02. நீ காலத்தை சரியாகப்பயன்படுத்தும்போது அருகில் இருப்பவர்களும் அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, தமது கால நேரத்தை சரியாகப் பயன்படுத்த வழி பிறக்கும்.

03. நீ விதைப்பதைத்தான் அறுவடை செய்வாய் என்பதைப் புரிந்துகொண்டு, உனக்கும் மற்றவருக்கும் உதவும்படியான சேவைகளை மட்டுமே விதைத்துக்கொள்.

04. காலம் என்பது மிகச்சிறந்த மூலதனம், ஒரு வரவு செலவுத்திட்ட அடிப்படையில் ஒவ்வொரு வினாடியையும் சுய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துவேன் என்று உறுதி கொள்.

05. உங்கள் அலட்சியத்தால் காலத்தின் ஏதாவது பகுதியை இழந்தால் அதை பெரிய பாவமாகக் கருதுங்கள்.

06. உனக்களிக்கப்பட்ட காலம் முடிவடைந்துவிட்டால் உனக்காக ஒரு நினைவுச் சின்னத்தை இப்புவியில் விட்டுச் செல்ல வேண்டுமென நினைத்துக் கொள். அது கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னமல்ல.. இந்த உலகம் சிறிதளவாவது உயர்வடைய பாடுபட்டானே என்று மற்றவர்கள் போற்றும் நினைவுச்சின்னம், அந்தச் சின்னம் மனித இதயங்களில் கட்டப்படுகிறது.

07. காலமே பின்னேறு .. பின்னேறு என்று கூச்சலிடுவோரின் குரலை காலம் என்றுமே கேட்பதில்லை. போதுமான காலம் எதிர் காலத்தில் உள்ளது, அதையாவது சரியாகப் பயன்படுத்து என்று கூறிவிட்டு காலம் வேகமாக நடக்கிறது.

08. உங்களுக்கு தேவையான பொருளாதார வசதியையும், மன அமைதியையும் சரியான வழியில் பெற்றிருந்தால் காலத்தை சரியாகப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பது பொருளாகும்.

09. சோம்பலான காலம் பெரியவர்களுக்குக் கிடையாது. அவர்கள் தொடர்ந்து காலத்தை நற்செயல்களை செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுடைய ஆறாவது அறிவு விழித்திருக்கிறது. அது உள்ளிருந்து பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது.

10. உயர்ந்தவர்களின் உள்ளங்களில் எதிர்மறையான எண்ணம் வந்தால் அது உடனடியாக நேர்மறையாக மாற்றப்படும்.
மரணபயத்தை விலக்கும்
விவேகம்

11. தனது அறிவோ சம்மதமோ இல்லாமல் மனிதன் இந்தப் பூமிக்கு வருகிறான். சிறிது காலம் வாழ்வெனும் சிறந்த பள்ளியில் பாடம் கற்கிறான். பிறகுஅவனது சம்மதமின்றி இன்னொரு நிலை அறிவிற்கு உயர்த்தப்படுகிறான். மனிதன் என்றென்றும் புவியில் நிலைத்திருப்பது படைத்தவனின் நோக்கமாக இல்லை.

12. சாவு என்ற கருவி இல்லாவிட்டால் உலகம் கண்ட கொடியவர்களை நினைத்துப் பாருங்கள். அவர்கள் இன்னும் வாழ்ந்து எல்லோர் வாழ்வையும் சீரழித்திருப்பார்கள்.

13. மரணம் வந்தால் உடலைவிட்டு விலகி நிரந்தரமான இறுக்கமில்லாத அழிவற்ற உடலைப் பெறுகிறான் மனிதன். இந்த உண்மையை ஏற்று மனதைவிட்டு கவலையின்றி நீங்கிவிட வேண்டும்.

14. மாற்றத்தின் மாறாத விதியும், மரணமில்லா வாழ்வும் பிரபஞ்சத்தில் இந்தப் பூமித்தளத்தில் ஒன்றாக இருக்க முடியாது.

15. பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த திட்டத்தில் தனி மனிதன் ஒரு சேவகன்தான். அவனது ஆசைகள் அவற்றை அடையும் உபாயங்கள் எல்லாம் வாழ்க்கை என்ற சிறிய இடைவெளியில் நடந்து முடிந்துவிடுகின்றன.

16. தத்துவஞானி மரணத்தை வந்தால் வரட்டுமென இயல்பாக ஏற்றுக்கொள்ளலாமென அதை இயல்பாக மறந்துவிடுகிறான். பின் தன்னால் கட்டுப்படுத்த முடிந்த விடயங்களை கட்டுப்படுத்தி வாழ்வை கொண்டு செல்கிறான்.

17. மரணத்தைக் கண்டு பயப்படுவோர் படைத்தவனை அவமதிப்பதாக தத்துவஞானிகள் கருதுகிறார்கள்.

18. மரணத்திற்கு அஞ்சுவோர் கவலைப்பறவைக்கு இரை போடுகிறார்கள்.
மனத்தின் எல்லையில்லாத ஆற்றல்

19. படைத்தவன் மனிதனுக்கு வழங்கிய மிக உயர்வான பரிசு மனம், ஆனால் மனிதனால் மோசமாகப் பயன்படுத்தப்படும் கருவியும் மனம்தான்.

20. எல்லையற்ற அறிவினை மனம் மூலம் தொடர்பு கொண்டால் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் பெற முடியும்.

21. மனிதனின் எல்லா வெற்றிகளும், தோல்விகளும் அவன் மனதை எப்படிப் பயன்படுத்தினான் என்பதில்தான் தங்கியுள்ளது.

22. பயன்படுத்தாத மனோ சக்தி பயன்படுத்தாத கரத்தைப்போல மெலிந்துவிடும்.

23. எல்லா சிந்தனைகளினதும் முக்கிய குறைபாடு உணர்வுகளால் மனோசக்தி ஒதுக்கப்படுவதை, மனிதன் அனுமதிப்பதே. இத்தவறு மோசமான தவறாகும்.

24. சரியான சிந்தனையாளர் தங்களின் மனங்களின் எல்லாத் துறைகளையும் சிந்திக்க உபயோகிப்பவர்கள். காதல் உணர்வு வெளிப்படுவதை சரியான விவேகம், மனோ சகத்தியால் கூர்மையாக அவதானிக்காமல் விடுவதில்லை.

25. கற்பனையே மனித ஆத்மாவின் சிற்பி இதன் மூலம் தன் விதியை தானே நிர்ணயிக்கவும், அதை மாற்றவும், முடியும். கற்பனையின் சக்தியால் மின்னல் வேகத்தில் பிரபஞ்சத்தின் எல்லையற்ற தூரத்தை கடக்க முடியும். காற்றையும்
, கீழிருக்கும் கடலையும் வெல்ல முடியும். பழைய கருத்துக்களை செம்மைப்படுத்தி இலட்சக்கணக்கான புதிய சிந்தனைகளை உருவாக்க முடியும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv