ரோபோக்களின் துணையுடன் இருதய சத்திர கிச்சைஇன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பல்வேறுபட்ட தேவைகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.ரோபோக்களின்உதவியுடன் மிகவும் இலகுவான முறையிலே இருதய சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர் சென்னை மருத்துவர்கள். இருதய அறுவைச் சிகிச்சையில் ரோபோக்களை பயன் படுத்துவது முக்கிய திருப்பம் எனவும், இருதய அறுவைச் சிகிச்சையினை ரோபோக்களின் உதவியோடு மேற்கொள்வது நோயாளிகளுக்கு பல வசதிகள் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த அறுவைச் சிகிச்சை முறை மூலமாக சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சையினை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.


இந்த அறுவைச் சிகிச்சை மூலம் குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்தளவு இரத்த விரயமே ஏற்படுவதாகவும். இதனால் நோயாளிக்கு குறைந்த அளவு இரத்தம் ஏற்றினால் போதுமானது என்றும், இவனை பயன் படுத்துவதனால் நோயாளிக்கு வலி குறையும் என்றும்,

அறுவைச் சிகிச்சையின்போது வெளியேறும் இரத்தத்தின் அளவு குறைவு என்பதனால் நோயாளிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் குறைந்தளவு பகுதிகளே சேதமடைவதுடன் போடப்படும் தையல் உறுதியானதாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv