ஆன்மாவிற்கான பாதை - கவலை - ஏழாவது அற்புதம்.-வாராந்த பழமொழிகள் -

ஆன்மாவிற்கான பாதை - கவலை - ஏழாவது அற்புதம்.
தாயகத்தில் ஏற்பட்ட அவலங்களால் துவண்டு போயுள்ள நம் தமிழ் உறவுகளுக்கு உரமூட்ட இவை தரப்படுகிறது.

01. வஞ்சகர்கள் கவலை உணர்வை அறிந்திருக்கமாட்டார்கள். அப்படி அறிந்திருந்தால் அவர்கள் வஞ்சகர்களாக இருந்திருக்கமாட்டார்கள்.

02. ஆபிரகாம் லிங்கனை உண்மையாக நேசித்த ஒரே பெண்ணான ஆன் ரட்லட்ஜ் இறந்ததால் அவருக்கு ஏற்பட்ட கவலை அவரது உயர்ந்த ஆன்மாவை உலகிற்குக் காட்டியது. அதுதான் அவரை கொடுமையான காலகட்டத்தில் அமெரிக்காவின் உன்னதத் தலைவராக்கியது.

03. தோல்வியை நினைத்து நினைத்து வருந்தாமல் அதை தேவையான ஒழுங்குபடுத்தும் சக்தியாக ஏற்றுக்கொண்டால் அது சிறந்த ஆசீர்வாதமாகும். அதனால் வருத்தப்பட்டு அந்த வருத்தத்தால் எந்த நன்மையும் கிடைக்காவிட்டால் அது ஒரு சாபமாகும். இதில் எதைத் தேர்ந்தெடுப்பதென்பது மனித மனதில்தான் இருக்கிறது.

04. கவலையான தருணங்களில்தான் மக்கள் தங்கள் பாசாங்குகளை தூக்கி எறிந்துவிட்டு தங்கள் உண்மை முகங்களை காட்டுவார்கள். குணப்படுத்த முடியாத குடிப்பழக்கத்தை கவலை பல சந்தர்ப்பங்களில் குணப்படுத்தியுள்ளது.

05. கவலைப்படும் ஆற்றல் இல்லாதவன் மனித வடிவில் உலாவும் சாத்தானாகும்.
06. கவலைப்படவே நேரமில்லாதவாறு தீவிரமான வேலையில் இறங்கினால் கவலையை மறக்கடிக்கலாம்.

07. கவலை உங்களை ஆட்கொண்டால், உங்கள் எண்ணங்களை இன்னும் நிறைவேறாத நோக்கத்தை அடைவதற்காக திருப்புங்கள். தீவிரமாக சிந்தியுங்கள் நீங்களே உங்கள் தலைவர் என்ற உண்மையையும் கண்டறிவீர்கள்.

08. கடவுள் மர்மமான வழியில் சென்று தன் அற்புதங்களை நிறைவேற்றுகிறார் என்று தத்துவானிகள் கூறுகிறார்கள்.

09. கவலையை சரியாக நீங்கள் மதிப்பிடக் கற்றுக்கொண்டால் அவை தோன்றும்போதே அவற்றின் நன்மைகளையும் உணர்ந்து கொள்வீர்கள்.

10. கவலையை எப்போதும் நன்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கவலையால் வருத்தப்பட்டால் வயிற்றுப்புண், உயர் இரத்த அழுத்தம், மற்றவரிடமிருந்து விலகி வாழ்தல் போன்ற அவலங்கள் ஏற்படும்.

11. ஒவ்வொரு கவலையும் அதற்கு இணையான சந்தோஷம் தரும் விதையையும் கொண்டு வருகிறது. அதைத் தேடிக்கண்டு பிடித்து, முளைக்கச் செய்து பயனடையுங்கள்.

12. தன் சொந்தப் பழக்கங்களை உருவாக்கவும் உடைக்கவும் உள்ள உரிமை மனிதன் கையில்தான் இருக்கிறது. மனித மனதில் எதையெல்லாம் கற்பனை செய்யவும், நம்பவும் முடியுமோ அவற்றையெல்லாம் அதே மனதால் அடையவும் முடியும்.

13. ஒரு முறை ஒரு குறிக்கோளை தேர்ந்தெடுத்து அதை நிறைவேற்ற திட்டங்களை உருவாக்கிவிட்டால், அந்தக் குறிக்கோளோடு தொடர்புடைய எல்லாப் பழக்கங்களையும் பிரபஞ்ச பழக்க சக்தியின் விதி நிர்ணயித்து, அதனால் அவை தாமாகவே அக்குறிக்கோளை நோக்கி அவனை செலுத்தும்.

14. பிறப்பதற்கும், இறப்பதற்கும் உரிய உரிமையைத்தவிர மற்ற எல்லா உரிமைகளையும் இறைவன் மனிதனுக்குக் கொடுத்தும், மனிதன் அதை அறியாமல் ஜாதிக்கும், மதத்திற்கும், அரசியலுக்கும், ஆயுதங்களுக்கும், அடாவடித்தனங்களுக்கும் அடிமையாகி வாழ்கிறான்.

15. எவற்றையெல்லாம் கற்பனை செய்யவும், நம்பவும் முடியுமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றும் வல்லமை கொண்டது மனம்.

16. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு சதவீதத்திற்குக் குறைவானவர்கள்தான் அடுத்த தலைமுறையின் நன்மைக்காக நாகரிகத்தின் விளக்கை கையில் ஏந்திச் செல்கிறார்கள். மற்றவர்கள் உயிருடன் நடமாடும் பிணங்கள் என்பதே உண்மை. ஒவ்வொருவரும் தங்கள் மனங்களை கண்டறிந்து பயன்படுத்துவதால்தான் நாகரிகம் வளர்ந்து செல்கிறது.

17. இயற்கை சஞ்சலப்படுவதில்லை, தள்ளிப்போடுவதில்லை, திட்டங்களை மாற்றுவதில்லை இந்தக் குணங்களால் மக்கள் பின்பற்றும் அழகிய உதாரணமாக இயற்கை இருக்கிறது.

18. தடைகளைத் தாண்ட வேண்டும் என்பதற்காக பின்வாங்காத மனிதரிடம்தான் பிரபஞ்ச அறிவு தன்னைத்தானே ஒப்படைக்கிறது. தாமஸ் அல்வா எடிசன் பத்தாயிரம் தடவைகள் தோற்ற பின்னரே மின் விளக்கின் இரகசியத்தை கண்டறிந்தார்.

19. இயற்கையின் விதிகளை புரிந்துகொண்டு, முயன்று கற்றுக்கொண்டு அவற்றிற்கேற்றபடி வாழ்பவர்களுக்கே அநீதி ஏற்படாதபடி பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

20. உன்னதமான வெற்றி இரகசியங்களை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால் நின்று, நிதானித்து, யோசித்து, தியானித்து, நீங்கள் செய்ய வேண்டியதை உங்களுக்குள் இருந்து பேசும் அந்த சிறிய அசையாத குரல் உங்களுக்கு தவறாமல் தெரிவிக்கும்.

21. காலம்தான் எல்லா மனித நோய்களுக்குமான பிரபஞ்ச மருத்துவர். காலம் பகுதறிவற்ற இளமைக்கு பதிலாக வயதில் முதிர்ச்சியையும், ஞானத்தையும் தருகிறது.

22. காலம்தான் வயல்களில் தானியங்களை உருவாக்குகிறது, காலம்தான் மரங்களில் காய்களை கனியச் செய்கிறது, மனிதன் உண்டுவாழ அவற்றை தயார் செய்வதே காலம்தான்.

23. காலம் இயற்கையின் விதிகளை புறக்கணிக்கவோ, மறுக்கவோ செய்வோரை கடுமையாக தண்டிக்கிறது.

24. காலம்தான் விலை மதிக்க முடியாத செல்வம். குறிப்பிட்ட தேதியில், இடத்தில் ஒரு வினாடிக்கு மேலாக நம்மால் இருக்க முடியாது.

25. காலம் முட்டாள்கள் மனம் திருந்தி நல்லவர்களாக மாற வாய்ப்பளிக்கிறது.

26. காலம் நம் பாவங்கள், தவறுகளை நினைத்து வருந்தவும், அவற்றில் இருந்து பயனுள்ள அறிவினைப் பெறவும் கருணையோடு உதவுகிறது.

27. ஒவ்வொருவரும் விதைப்பதையே அறுவடை செய்வார் என்ற பிரதிபலன் விதியை இயக்குபவராக காலமே செயற்படுகிறது.

28. இந்த விதியை வைத்துத்தான் தத்துவஞானிகள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்கிறார்கள். ஒரு அமைப்பின் நிர்ணயிக்கப்பட்ட பழக்கங்களையும், செயலையும் வைத்து அதனுடைய அறுவடையை தத்துவஞானி முன்னரே கண்டறிகிறான். ஆனால் தத்துவஞானி சொல்வதை சாதாரண மனிதர்கள் கேட்டு சிரிக்கிறார்கள், காலம் மெதுவாக செய்து முடிக்கும்போது அதைப்பார்த்து அழுகிறார்கள்.

29. உங்கள் வாழ்வில் நீங்கள் தேர்ந்தெடுத்த வியாபாரத்திலோ அல்லது சில தொழில் முயற்சிகளிலோ நீங்கள் தோல்வியடைந்திருந்தால் காலம் உங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கிறது என்று கருதுங்கள்.

30. உங்கள் பாதையில் இருந்து விலகி, தடைகளற்ற அகலமான பாதையில், அதிர்ஷ்டமான பாதையில் செல்வதற்காகவே உங்கள் மீது தடைகள் விதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உடனடியாக புதிய பாதையை கண்டறியுங்கள்.


நல்ல நூல்களில் இருந்து வாசித்து, வாசிக்க நேரமில்லாத புலம் பெயர் தமிழருக்காக இச்சேவை எதிர்பார்ப்பின்றி நடாத்தப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv