உலகிலேயே மிக குறைந்த விலையுள்ள நானோ கார் இன்று முதல் விற்பனை !


உலகிலேயே மிகவும் குறைந்த விலையில் டாடா நிறுவனம் தயாரித்துள்ள நானோ கார் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.மும்பையில் உள்ள டாடா நிறுவன ஷோரூமில் நடக்கும் விழாவில் முதல் காரை தனது வாடிக்கையாளருக்கு ரத்தன்டாடா வழங்குகிறார். கடந்த 2003ல் அறிவிக்கப்பட்ட நானோகார் பல்வேறு தடைகளை தாண்டி 6 ஆண்டுகளுக்குப் பின் இன்று முதல் சாலைகளில் ஓடத்துவங்குகிறது. மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் கார் தயாரிப்பு ஆலை அமைக்க திட்டமிட்டு சுமார் 75 சதவீதம் பணிகள் முடிவடைந்திருந்தன.
இந்நிலையில் அங்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக ஆலை குஜராத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு ஆலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கார் வெளிவருவதில் ஏற்படும் தாமதத்தை விரும்பாத டாடா, பந்த்நகர் ஆலையில் இக்காரை தயாரிக்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து முதல்கட்டமாக முன்பதிவு செய்துள்ள 2.5 லட்சம் பேரில் 1.55 லட்சம் பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு இந்த ஆண்டுக்குள் கார் வழங்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv