மறுபடியும் உலகின் முதலிடத்தை நோக்கி சீனா..


கார் உற்பத்தியில் அமெரிக்காவை முந்தியது..இந்தியாவை சீனா 2012 ல் தாக்கும்.
சந்திரமண்டலத்திற்கு ஆட்களை அனுப்பும் பணிகள் துரித கதியில்..


கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இன்றய அமெரிக்கா போல உலகின் முதலாவது வல்லசு நாடாகத் திகழ்ந்த சீனா இப்போது மறுபடியும் தனது எழுச்சிக் காலத்தில் பிரவேசித்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேலை நாடுகளுக்கு தொடர்ந்து வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. உலகத்தின் பாற்பொருட்கள், தானியங்கள் போன்றவற்றை அதிக விலை கொடுத்து சீனா வாங்கத் தொடங்கியதில் இருந்தே இந்தச் சிக்கல் ஆரம்பமாகியது. இப்போது சந்திரமண்டலத்திற்கு ஆளை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள சீனா, கார் உற்பத்தியில் அமெரிக்காவை முந்திச் சென்றுள்ளது.மோட்டார் வாகன உற்பத்தியில் முதல் முறையாக அமெரிக்காவை ‘ஓவர்டேக்’ செய்து சாதனை படைத்துள்ளது சீனா.

கடந்த ஆறுமாதங்களில் அமெரிக்காவை விட 17.7 சதவிகிதம் அதிக வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது சீனா (6.1 மில்லியன் யூனிட்டுகள்).

குறிப்பாக கடந்த ஜூன் மாதம் மட்டும் 1.14 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது சீனா. இது கடந்த ஆண்டைவிட 36.4 சதவிகிதம் அதிகமாகும்.

அதேபோல விற்பனையிலும் சாதனைப் படைத்துள்ளது சீனா. கடந்த ஏப்ரலில் 1.15 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்த சீனா, ஜூன் மாதம் 1.14 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.


அதுமட்டுமல்ல, தொடர்ந்து 4 மாதங்கள் சராசரியாக 1.1 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்தும், தேக்கமடையாமல் விற்றும் வந்துள்ளன சீன நிறுவனங்கள்.

ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் வாகனங்களை விற்க முடியாததால், நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்க அல்லது நிறுத்த வேண்டிய சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது.


அதேவேளை இந்தியா மீது 2012ம் ஆண்டில் சீனா படையெடுக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக பிரபல இந்திய பாதுகாப்பு ரெவ்யூ என்ற இதழின் ஆசிரியர் பரத் வர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2012ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்பாகவோ இந்தியாவை சீனா தாக்கக் கூடும். இந்தியாவுக்கு இறுதியான, உறுதியான பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என சீனா துடித்துக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv