தமிழ்நாட்டில் சீரழியும் தமிழ் கலாச்சாரம்

சீரழியும் தமிழ் கலாச்சாரம்


இது தமிழ்நாட்டில் நடந்த குத்தாட்டம் மேடை நிகழ்ச்சி.இதுவரை நான் பார்த்ததில்லை அப்படி ஒரு ஆபாசம்.அதுவும் ஒரு மேடை நிகழ்ச்சியில் செய்கிற அட்டூழியம்.இதை எப்படி அந்த ஊர்மக்கள் அனுமதிக்கிறார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.அந்த ஊர் இளைஞர்கள் அப்படித்தான் ஜொல் வழிந்து பார்த்துகொண்டிருக்கிறார்கள்.இது புதுக்கோட்டை மாவட்டம் பூவற்றகுடி அப்படித்தான் பின் உள்ள பேனரில் உள்ளது இதில் இன்னும் கொடுமையான செய்தி என்னவென்றால் கோவில் திருவிழாவுக்காக ஏற்பாடு செய்யபட்ட கலைநிகழ்ச்சியாம்.அதுவும் அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் சிங்கை,மலேசியா,அபுதாபி வாழ் அதிரடி அம்பாள் தொண்டர்கள்,என பின்னுள்ள பேனரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.மிகவும் வருத்தமாக உள்ளது.இப்படி கோவில் நிகழ்ச்சியென்று அம்பாள் படத்தை பின்னுள்ள பேனரில் போட்டு படத்தின் முன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்.ஒருதடவை நடிகை குஸ்பு ஏதோ மேடைநிகழ்ச்சியில் சாமி
சிலை முன்பு செருப்புகாலுடன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என ஒரு வாரப்பத்திரிகையில் படித்ததாக ஒரு ஞாபகம்.அந்த போராட்ட நாய்கள் இப்போது எங்கு போனார்கள்.இப்படி செய்வது அல்லாமல் இந்த குத்தாட்டத்தை சிடியில் காபி செய்து காசு பார்த்துகொண்டிருக்கிறது, ஒரு வியபாரகும்பல்.இப்படியே போனால் நமது தமிழ்நாட்டு கலச்சாரம் சீரழிந்துவிடும்.

நான் அரிசந்திரன் மாதிரி பேசல இப்படியேபோனால் தமிழ்நாட்டு இளைஞர்களின் காலம் கேள்விக்குறியாகிவிடும்.

சமூக நலத்தோட பார்த்தால் இவர்கள் செய்வது மிகதவறு.ஆனால் இப்படியும் பெண்கள் பொது இடங்களில் தங்களை தொட அனுமதிப்பார்கள் என இதை பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.ஆனால் அவர்கள் சூழ்நிலை என்ன என எனக்கு தெரியாது. இதை ஒரு பிழப்பாக தேர்வு செய்வது கையாலாகாதனம்.இந்த நிகழ்ச்சி சில பேருக்கு முன்பே தெரிந்திருக்கலாம்.

ஆனால் எனக்கு இப்போதுதான் தெரியும்.இந்த சிடி பிஸினஸ் எக்ஸ்போர்ட்டும் நடந்துகொண்டிருக்கிறது.இங்கு இந்த சிடியின் விலை $6 சிங்டாலர்.அட்டன்ஸ் ஒன்லி பதிவாகிவிடும் என்பதாலயே மிக குறைவாக வீடியோவை வெட்டி பதிவேற்றம் செய்தேன்


நன்றி தென் சங்கர்

குறிப்பு -வீடியோவை பிரசுரிக்கவில்லைபண்பாட்டைக் காக்க இளையோர் களமிறங்குதலே விழிப்புணர்வு என்று கருதுகிறேன். அந்த இளையோர் தலைமுறையை சீரழிக்கும் இதுகள் எப்படி கோயில் பெயரில் அரங்கேறியது என்று நெஞ்சை பிளக்கும் கேள்வி என்னுள் எழுந்துள்ளது. தங்களின் தகவலால் இதுபோல் இனி நடக்காமல் இருக்க விழிப்புணர்வு கொள்வோமாக. நடந்த தவறுக்கு பொறுப்பு யாரோ அவர்களை உரியமுறையில் சமூகத்திற்கு வெளிக்கொண்டுவர வேண்டிய பொறுப்பு நிச்சயம் எங்களிடம் அல்லாமல் வேறுயாரிடமும் அல்ல.

முத்துமணி

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv