உலக பொருளாதாரத்தில் முன்னேற்றம் !

உலக பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து வெளிவர ஆரம்பிக்கிறது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. ஆனாலும் இந்த மீட்சி சீரற்றதாகவும், மந்தகதியிலும் அமையவே வாய்ப்புகள் அதிகம் என அது தெரிவித்துள்ளது.

உலகில் அதிகம் தொழில்மயமான எட்டு நாடுகளுடைய ஜி எட்டு அமைப்பின் தலைவர்களிடையில் இத்தாலியில் விவாதங்கள் நடந்துவரும் நிலையில், நாணய நிதியத்தின் இந்த மதிப்பீடு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதிச் சந்தைகளிலும் வங்கிகளிலும் இப்போதும் பிரச்சினைகள் இருந்துவரவே செய்வதாகவும், செல்வந்த நாடுகளின் பொருளாதாரங்கள் அடுத்த வருடத்தின் பிற்பகுதியில்தான் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப முடியும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளில் முன்பில்லாத வகையில் எடுக்கப்பட்ட பெரும் முயற்சிகள் உலகப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க உதவும் ஒரு காரணியாக அமைந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது
நன்றி அலை

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv