வாழ்வை மேம்படுத்த வழங்கும் வாராந்த பழமொழிகள்
உலகின் உயர்ந்த செல்வங்கள் பன்னிரண்டு.

பழமொழிகளுக்கு ஒப்பான தகவல்களை பல்வேறு நூல்களில் இருந்தும் திரட்டித்தருகிறோம். ஒவ்வொரு நாளும் அற்புதம் என்ற நூலில் இருந்து.

உலகத்தில் 12 உயர்ந்த செல்வங்கள் இருக்கின்றன, அவற்றில் 11 பணமே அல்ல. அவையாவன
01. நேர்மறையான மனோபாவம்
02. உடல் ஆரோக்கியம்
03. மனித உறவுகளில் சமாதானம்
04. பயத்தில் இருந்து விடுதலை.
05. எதிர்கால சாதனை குறித்த நம்பிக்கை
06. விசுவாசத்திற்கான ஆற்றல்
07. தனது ஆசீர்வாதங்களை பகிர தயாராக இருப்பது
08. அன்போடு செய்யும் வேலை
09. எல்லாவற்றிலும் திறந்த மனம்
10. சுய கட்டுப்பாடு
11. மக்களை புரிந்து கொள்ளும் திறன்
12. பணம்.

01. நேர்மறையான மனோபாவம் : ஒருவனின் பிரார்த்தனை நல்ல விளைவுகளை தருமா இல்லை தீய விளைவுகளை தருமா என்பதைத் தீர்மானிக்கும் காரணியாக மனோபாவம் இருக்கிறது. எனவேதான் நேர்மறையான மனோபாவம் செல்வங்களில் எல்லாம் முதலாவது செல்வமாக இருக்கிறது.

02. உடல் ஆரோக்கியம் : நல்ல எண்ணம் இருந்தால் உடல் ஆரோக்கியமாகக் கட்டியமைக்கப்படும், தீய எண்ணம் இருந்தால் ஆரோக்கியமற்ற உடல் உருவாகும். தீய எண்ணம் உள்ளவருக்கு நல்ல உடல் தேவையில்லை என்பது இறைவன் கருத்தாகும்.

03. மனித உறவுகளில் சமாதானம் : உங்கள் மனதிற்குள் சமாதானம் இருந்தால் மற்றவர்களுடன் சமாதானமாக வாழ்வது கடினமாக இருக்காது. பயத்தை வென்றால் மனதிற்குள் சமாதானம் ஏற்படும்.

04. பயத்தில் இருந்து விடுதலை : பயத்திற்கு அடிமையான எவனுமே செல்வந்தனில்லை. பயம் இருந்தால் எல்லாச் செல்வங்களையும் அவன் இழந்துவிடுகிறான்.

05. எதிர்கால சாதனை குறித்த நம்பிக்கை : வாழ்வில் விரும்பிய ஸ்தானத்தை அடைவோம், அல்லது கடந்த காலத்தில் பெறத்தவறிய நோக்கத்தை அடைவோம் என்ற நம்பி;கையுடன் எதிர் காலத்தை நோக்காத மனிதன் உண்மையில் ஏழைதான். நம்பிக்கையே மனிதனின் ஆன்மாவை விழிப்புடனும், செயல் துடிப்புடனும் இருக்க வைக்கிறது.

06. விசுவாசத்திற்கான ஆற்றல் : மனம் என்ற தோட்டத்தின் வளமான மண்ணே விசுவாசமாகும். இதுவே பிரபஞ்ச அறிவுக் களஞ்சியத்துடன் தொடர்பை ஏற்படுத்த ஆதாரமான செல்வமாகும். எண்ணத்தின் சாதாரண சக்திகளை ஆன்மீக சக்தியாக மாற்றுவது விசுவாசமாகும்.

07. தனது ஆசீர்வாதங்களை பகிர தயாராக இருப்பது : உன் சகோதரனின் படகு கரையைச் சேர உதவு, அட என்ன ஆச்சரியம் உன் படகும் கரையைச் சேர்ந்திருக்கக் காண்பாய். அடுத்தவருக்கு நீங்கள் எதைச் செய்தாலும் நீங்கள் உங்களுக்கும் அதையே செய்கிறீர்கள் என்பது பொருளாகும்.

08. அன்போடு செய்யும் வேலை: அன்போடு செய்யும் வேலை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதைச் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பவனைத் தவிர செல்வந்;தரும் செயல் வேறேதுமில்லை.

09. எல்லாவற்றிலும் திறந்த மனம் : திறந்த மனம் உடையவர்களே கலாச்சாரத்தில் சகிப்புத் தன்மையை வெளிப்படுத்த முடியும். திறந்த மனத்தை நிர்வகிக்கும் மனிதனால்தான் உண்மையிலேயே படித்தவனாக இருக்க முடியும். இளமையாகவும் இருக்க முடியும்.

10. சுய கட்டுப்பாடு : தன்னைத்தானே வெல்ல முடியாதவனால் தனக்கு வெளியே எதையும் வெல்ல முடியாது. ஒருவன் தனது மனதை முழுமையாக வசப்படுத்தினால்தான் அதைப் பயன்படுத்தி தனது நோக்கை அடைய முடியும். தலையெழுத்தை வென்றவனே தலைவனாக முடியும்.

11. மக்களை புரிந்து கொள்ளும் திறன் : மக்கள் எல்லோருமே ஏறத்தாழ ஒரேவிதமாகவே இருப்பர். பின்வரும் ஒன்பது அடிப்படைகளில் ஒன்றாலோ அல்லது பலவற்றாலோ கட்டப்பட்டவர்கள்தான் மக்கள்.

01. அன்புணர்வு
02. காம உணர்வு
03. பொருளாதார இலாபம்
04. சுயத்தை பாதுகாக்கும் ஆசை
05. உடல், மனதின் சுதந்திரத்திற்கான ஆசை
06. அங்கீகாரம் சுய வெளிப்பாட்டிற்கான ஆசை
07. இறந்த பின் வாழ்வு தொடர்வதற்கான ஆசை
08. கோப உணர்வு
09. பய உணர்வு.

இவற்றை அடிப்படையாக வைத்து உங்களை நீங்களே புரிந்து கொண்டால் மற்றவர்களை புரியும் பாதையில் நீங்களும் இருப்பீர்கள்.

12. பணம் : இந்த பன்னிரண்டு செல்வங்களில் இறுதியானதும், தொட்டு உணரக்கூடியதாக இருப்பதும்தான் பணம். இதற்கு முந்திய பதினொரு விடயங்களையும் கடைப்பிடித்தால் பணம் தானாக வந்து சேரும். வெறுமனே பணத்தை மட்டும் சேர்ப்பவர்கள் கடைசியில் பெரும் தோல்வியடைந்து, தேடிய பணத்தையே மற்றவரிடம் பறி கொடுப்பதையும் நாம் காணலாம். எனவேதான் இந்த பன்னிரண்டு செல்வங்களையும் அறிந்து வாழ்வில் உயர்வடையுங்கள். பணத்தை பாவிக்கும் கலை தெரியாதவர் பணத்தை பெறுவதனால் யாதொரு பயனும் ஏற்படாது. மேலே சொன்ன 11 விடயங்களிலும் தெளிவு இல்லாதவரிடம் 12 விடயமான பணம் இருந்து பயன் எதுவும் கிடையாது.

நன்றி அலைகள்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv