மைக்கல் ஜாக்சனின் 25.000 டாலர் தங்கமுலாம் சவப்பெட்டி எங்கே ?


ஜாக்சனின் மூளையுடன் மறுபடியும் உர்வலம் வருமா ?
யாருக்கும் தெரியாத கொலிவூட் மலையில் வைக்கப்படுமா ?
இல்லை அவருடைய ஓய்வு இல்லத்தில் வைக்கப்படுமா ?


மைக்கல் ஜாக்சனின் இறுதி ஊர்வலத்திற்காக சுமார் 25.000 அமெரிக்க டாலர்களில் தயாரிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட சவப்பெட்டியை மற்றவர்களுக்கு தெரியாத இடத்தில் வைக்க ஏற்பாடாகியுள்ளது. அமெரிக்காவின் புகழ் பெற்ற கொலிவூட் மலைப்பகுதியில் யாருக்கும் தெரியாத இடத்தில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேவேளை மைக்கல் ஜாக்சன் எவ்வாறு இறந்தார் என்பதைக் கண்டு பிடிப்பதற்காக அவருடைய மூளை இப்போதும் வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிhசோதனை முடிந்ததும் மூளையை இதே சவப்பெட்டியில் கொண்டு சென்று அடக்கம் செய்ய குடும்பத்தினர் உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருடைய வாழ்க்கை பல அதிசயங்கள் கொண்டதாக இருப்பதால் இப்பெட்டியை அவருடைய வீட்டிலேயே வைக்கலாம் என்றும் சகோதரர் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இந்தச் சவப்பெட்டி மறுபடியும் தேவலய இடுகாட்டிற்கு கொண்டுவரப்படமாட்டாது என்று உள்ளுர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. இந்தச்சவப்பெட்டியின் பெறுமதியும், இதை ஏலத்திற்கு விடுவதால் வரக்கூடிய வருமானமும் இத்தகைய நிலையை உருவாக்கியுள்ளது. சவத்தை மறந்து சவப்பெட்டிக்குள் போயுள்ளது ஊடகங்களின் பார்வை.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv