இணையதளத்தில் தரவிறக்கம் செய்ய 25 லட்சம் புத்தகங்கள் !இணையதளத்தில் உலக புத்தகக்காட்சி தொடங்கி உள்ளது. இதிலிருந்து 25 லட்சம் புத்தகங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இனி, கடைகடையாக ஏறி இறங்க அவசியம் இல்லை. தகவல் தொழில்நுட்ப புரட்சிகாரணமாக இணையதளத்தில்பதிவு செய்தால்வீடு தேடி எந்தப் புத்தகமும் வரும். இப்போது இதைவிட ஒருபடி மேலாக இணையதளத்தில் படிக்கும் வகையில் நூலகமும் வந்துவிட்டது. தேவையான புத்தகங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில் ஒரு சிலவற்றுக்கு மட்டும் கட்டணம் வசுலிக்கசூப்படுகிறது.

உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை சர்வசாதாரணமாக இணையதளங்களில் காணமுடிகிறது. அதனால் இணையதள நூலகங்கள் பெயர் பெற்று வருகின்றன.

இந்நிலையில், இணையதளத்தில் உலக புத்தக்காட்சி தொடங்கி உள்ளது. பல இணையதள நூலகங்கள் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.

கடந்த சனிக்கிழமை இப்புத்தகக்காட்சி தொடங்கியது. இங்கு காணப்படும் லட்சக்கணக்கான புத்தகங்களுக்கு முன்னுரை, தொகுப்புரை என தனித்தனியாக தரப்பட்டுள்ளது. அவற்றை படித்துவிட்டு உள்ளே சென்று புத்தகங்களையும் படிக்கலாம். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 25 லட்சம் புத்தகங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். புத்தகப் பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு இது.

இந்த புத்தகக்காட்சியின் இணைய தள முகவரி
www.worldebookfair.com

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv