வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்! (2)


கடலூர்மாவட்டச் சுற்றுப் பயணத்தின் போதே நான் சிதம்பரம் நகருக்கும் சென் றேன்.அங்கே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் “Pioneering Spirit: The LearningCentre (செலுத்தும் சக்தியும், கற்றுக் கொள்ளும் மையமும்)’ என்கிற தலைப்பில் உரையாற்ற நான் சென்றேன். பல்கலைக்கழகங்கள் எப்போதுமே என்விருப்பத்துக்கு உரியவை

கல்விக் கண் களைத் திறந்த மாணவர்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஏணிப்படிகள்தான் பல்கலைக்கழகங் கள்.அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தோற்றமும் எழிலும் என்னை உவகை கொள்ள வைத்தன.அங்கிருந்தமாணவர்களும் உற்சாக அலை புரண் டோட பெரும் திரளாக அமர்ந்திருந்தார்கள்.என்னுரை யை முடித்து விட்டு கிளம்பிய என்னை அந்த இளைஞர் மாணவர் படைசுற்றிக் கொண்டது. அவர் களின் அன்பில் நான் திணறிப் போனேன். அவர்கள்என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தனர். ""கலாம் சார், நீங்கள் எப்போதுமாணவர்களைச் சந்திக்கப் போனா லும் அவர்களிடம் ஒரு உறுதி மொழியைச் சொல்லி,அவர்களையும் அதைச் சொல்ல வைப்பீர்கள். ஏன் எங்களுக்கு சொல்லவில்லை.இப்போது எங்களுக்கும் அதை நீங்கள் சொல்ல வேண்டும். உங்கள் வார்த்தைகளைக்கேட்டு நாங்களும் அதைப் பின்பற்றிச் சொல்ல வேண்டும்''’’ என்று அன்புக்கட்டளை இட்டார்கள்.அவர்களின்உந்துதல் சக்தியையும் விருப்பத் தையும் கண்டு நான் அகமகிழ்ந்தேன்.


உடனேமறுபடி மேடைக்குச் சென்று மாணவர்களுக்கான 10 உறுதி மொழியை அவர்களுக்குசொன்னேன்.

அரங்கத்தின் உள்ளே இருந்த ஆயிரம் மாணவர் களும், அரங்கத்துக்குவெளியே இருந்த ஆயிரக் கணக்கான மாணவர்களும் ஒன்று சேர்ந்து அந்த உறுதிமொழியை பெரும் சத்தத்துடன் திருப்பிச் சொன்னது இடி முழக்கமாய் இருந்தது.

அந்த முழக்க அலையை, இந்தியாவின் குரலை அலைகடல் களையும் தாண்டி உலகத்துக்குஅறிவித்தது போல் எனக்குத் தோன்றியது. உணர்ச்சி வயப்பட்டு உறுதி மொழியைச்சொன்ன பல மாண வர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அந்தகண்ணீர் எனக்கு ஒரு நம்பிக்கையின் ஒளியை ஏற்படுத்தியது. இளையசமுதாயத்தின் அந்த மிகப் பெரும் குரலோசை எனக்கு மீண்டும் உண்மையைஉணர்த்தியது. இளைய சமுதாயம் மிகவும் எழுச்சியுடன் இருக்கிறது. நமதுநாட்டின் முன்னேற் றத்துக்காக அவர்கள் எல்லா வேறு பாடுகளையும் கடந்துஒற்றுமையுடன் குரல் கொடுக்கத் தயாராக இருக்கி றார்கள்.

இந்தக் காட்சியைஇந்தியா முழுவதிலும் உள்ள எத்தனை எத்த னையோ கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் நான் காண்கிறேன்.

ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஏற்பட்டு வரும்ஒரு மௌனப் புரட்சியை இது காட்டு கிறது.மனமகிழ்வுடன் அவர்களிடமிருந்து நான் விடைபெற்றேன்.அங்கிருந்து நான் அடுத்துப் பயணப்பட்டது என் சொந்த ஊரான இராமேஸ்வரத்துக்கு- மறக்க முடியாத பயணம் அது..


ஜூலை 25, 2002ல் நான் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு,

முதல் முதலாக என் சொந்த ஊருக்குச் செல்லும் பயணம்.. எந்தஅலுவல் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறையாவது நான் ராமேஸ்வரத்துக்குச்சென்று விடுவது வழக்கம். ஆனால் இப்போது இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான்வரு கிறேன்.

என் சொந்த ஊரில்தான், என் சொந்த மக்களிடம்தான் எப்படிப்பட்டஎதிர்பார்ப்பு!மண்டபம்காம்ப் பகுதியில் நான் ஹெலி காப்டரில் இறங்கியபோது அந்தச் சத்தத்தையும்மீறி அங்கே கூடி நின்ற ஆயிரக்கணக்கான இராமேஸ்வரம் பகுதி மக்கள் கரவொலிஎழுப்பி வாழ்த்து சொன்ன போது என் மெய் சிலிர்த்தது. அவர்கள்ஒவ்வொருவரிடமும் இதயபூர்வ மான அன்பையும், நம்மூர்க்காரர் என்கிறபாசத்தையும் கண்டேன்.

அங்கிருந்து காரில் சாலைகளில் பயணம் செய்த போது,அந்த ஊரின் மணமும் காட்சிகளும் என் சிறு வயது ஞாபகங்களைக் கிளறி விட்டன.இதோ இங்கேதான் நான் பிறந்தேன். இங்கேதான் படித்தேன்.

படிக்கும் போதே, பகுதி நேர வேலையாக செய்தித்தாள் களை விற்றேன்..இந்தப் பகுதியையே உலுக்கி எடுத்து, தனுஷ் கோடித் தீவையே அழித்து துவம்சம் செய்த பயங்கரப் புயலைப் பார்த் தேன்.


.இராமேஸ்வரத்தின்இமாமாக இருந்த என் தந்தையும், இராமநாத சுவாமி கோயிலின் குருக்களான ஷிரிபக்சி லஷ்மண சாஸ்திரிகளும், மேன்மைமிகு பாதிரி போடலும் ஒன்றாக அமர்ந்துஇந்தத் தீவின் பிரச்னைகளை ஒற்றுமையோடு பேசி, அலசி தீர்வுகளைக் கண்டஅற்புதக்காட்சியை இங்கேதான் என் சிறு வயதில் பார்த்தேன்..இதோஇந்தத் தீவுக்கருகில் இருக்கும் இராமநாத புரத்தில்தான், 1947-ம் வருடம்ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி, இந்தியாவின் முதல் பிரதமர் திரு ஜவஹர்லால் நேருஅவர் கள், நம் நாடு சுதந்திரம் பெற்று விட்டதாக அறிவித்ததை ரேடியோவில்கேட்டுப் பரவசமடைந்தேன்..

இதோஇந்த இராமேஸ்வரத்தில்தான் என்னுடைய பள்ளி ஆசிரியர் சுப்ரமணிய ஐயர், என்மனதில், வாழ்க்கையில் மேலே மேலே உயர வேண்டும் என்கிற லட்சிய விதையைவிதைத்தார்

..அந்த விதைதானே என்னை பறப்பதற்கு ஏதுவான விமானவியல் தொழில்நுட்பத்தை படித்து, அது சம்பந்தமான வேலையில் என்னை ஈடுபடுத்த வைத்து,ராக்கெட் இஞ்சினியராக என்னை உயர்த்தியது மற்றும் படிப்படியாக என்னைஉயர்த்தியது..இதைப் போன்ற கலவையான எண்ணங்களுடன், நெகிழ்ச்சிமிக்க நினைவுகளுடன் காரில் நான் பயணம் செய்தவாறு இருந்தேன்..என்வீட்டை அடைந்த போது நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. "கலாமின்இல்லம்'’என்கிற பெயர்ப்பலகை அங்கே பொறித்திருந்தது. ஊர்மக்கள், என்சகோதரர் மற்றும் குடும்பத்தினர் என்னை அன்புடன் வரவேற்றார்கள். வீட்டுவாசலில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அவர்களுடன் பழைய நினைவுகளைப்பகிர்ந்து கொண்டேன்


பிறகு மொய்தீன் ஆண்டவர் பள்ளி வாசலுக்குச் சென்றுபிரார்த்தனை செய்தேன்..இந்த ஒவ்வொரு சம்பவமும் என் இளம்பிராயத்துநினைவுகளை இன்பமாய் நினைவூட்டிக் கொண்டே இருந்தன.இதேபள்ளிவாசலில்தான் சிறுவயதில் என் அப்பாவுடன் சென்று பிரார்த்தனை தொழுகைசெய்வேன். அப்பாவும் அம்மா வும்தான் எனக்குக் குரான் படித்துச் சொல்லித்தந்தார்கள். பள்ளிவாசலில் தொழுதபோது, அந்தக் காட்சிகள்தான் என்ஞாபகத்துக்கு வந்தன. அதிகாலை யில் எழுந்தது முதல் நாள்தோறும் ஐந்து வேளைநமாஸ் செய்வோம்.
இப்போதுநான் பிரார்த்தனை செய்தபோது என் மனநிலை வேறு மாதிரி யாக இருந்தது, மிகுந்தமனதிருப்தி இப்போது நிலவியது, அல்லாவுக்கு நன்றி சொல்லும் விதமாக இப்போதுஎன் பிரார்த்தனை நிகழ்ந்தது. இந்திய நாடும், இந்த உலகமும், இந்தஇராமேஸ்வரத் தீவு மக்களும் எல்லா நன்மைகளும் பெற்று நல்வாழ்வு வாழவேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை நான் உள்ளம் உருக வேண்டினேன்..

பள்ளிவாசலைவிட்டு வெளியே வந்த போது சில சிறுவர்கள் பள்ளிச்சீருடை அணிந்து சாலையில்நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதே போன்றதொரு சீருடை அணிந்து நானும்அப் போது பள்ளிக்குச் சென்ற காட்சி ஒரு சித்திரமாய் என் மனதில் ஓடியது.


அந்த நாட்களில் நான் ஒரு தலைவனைக் கண்டேன். அவருடைய உதடுகளில் இருந்துவந்து விழுந்த ஒவ்வொரு வார்த்தைக்காகவும் நான் தவமிருந்தேன்..அவரை நேரில்காண மாட்டோமா என்று ஏங்கினேன்..நான் மட்டுமல்ல, இந்தத் தமிழ்நாடே ஏங்கிக்கொண்டிருந்தது. அவருடைய தேன் தமிழுக்கு மயங்கிக் கிடந்தது. அந்நாட்களில், அவரைப் பெரும் முயற்சிக்குப் பிறகு எங்கள் பள்ளி விழாவுக்கே அழைத்து வந்து சாதனை புரிந்தோம் நாங்கள்..அந்தப் பெரும் தலைவன்.. தன்னிக ரில்லாத மேதை..


யார் தெரியுமா?

(தொடரும்)

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv