அப்பலோ 11 காணொளி மூலப்பிரதியை வெளியிட்டது நாஸா !
மனிதன் சந்திரனில் காலடி வைத்து 40 வருடங்கள்!உண்மையான ஒளிப்படம் முதல் முதலாக வெளியானது ! பார்க்க வாருங்கள் !
வரும் திங்கட்கிழமை அப்பலோ 11 விண்கலம் மூலம் மனிதன் சந்திரனில் இறங்கிய 40 வது ஆண்டு நிறைவு தினமாகும். இந்த நாற்பதாண்டு நினைவுகளின் ஓரங்கமாக சந்திரனில் 1969 யூலை 20 ம் திகதி சந்திரனில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ரோங்கின் பயணத்தின் நிஜமான ஒளி நாடாவை நாஸா வெளியீடு செய்துள்ளது. சந்திரனில் மனிதன் இறங்கியது பொய் என்றும், அந்தப் புகைப்படங்களும், ஒளிப்படங்களும் அமெரிக்காவில் உள்ள ஸ்ரூடியோவில் எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது தெரிந்ததே. விளக்குகளை போட்டு எடுக்கப்பட்ட படத்தில் பல கோணங்களில் நிழல் விழுவதாக குறை கூறப்பட்டிருந்தது. சந்திரனுக்கு போய் அமெரிக்கக் கொடியை பார்ப்பவரைத்தவிர மற்றவர்களால் சரி தவறு கூற முடியாது என்ற நிலை உருவானது. இந்த நிலையில் அனைவர் சந்தேகங்களையும் விலக்கும் வகையில் நாஸா சந்திரனில் மனிதன் காலடி வைத்த ஒளிப்படத்தின் மூலப்பிரதிகளை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இந்த ஒளிப்படத்தைப் பார்க்க விரும்புவோர்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv