டி.வி தொழில்நுட்பத்தில் அடுத்து வருகிறது “LED TV ?


தொழில்நுட்பத்தில் புதியபுதிய கண்டுபிடிப்புகள் வந்தவண்ணம் தான் உள்ளன.குறிப்பாக டி.வி யை பொறுத்தவரை புதிது புதிதான தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, அந்த வகையில் எல்.சி.டி தொழில்நுட்பத்தை தொடர்ந்து அதன் அடுத்தகட்ட தொழில்நுட்பமான எல்.ஈ.டி டி.விக்கள் சந்தையில் களமிறங்குகின்றன.
ஒருகாலத்தில் டி.வியை டெலிவிஷன்பெட்டி என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால் பெட்டியைப் போலவே அது அதிக கனமாக இருக்கும், நாகரீகம் வளர வளர சேட்டிலைட் சேனல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது, விளைவு டி.விகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. இதனால் டி.வி பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது.
அதில் முதலில் “பிளாட் வகை” தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டது.இதன் மூலம் தொலைக்காட்சியின் முன்பக்கம், உள்ள திரை சமதளமாக காட்சியளித்தது. அது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக இருந்தது, அடுத்தது, “ஸ்லிம் பிட்” தொழில்நுட்பம் இந்த தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சியின் பின்பகுதி சிறியதாக்கப்பட்டது. இதன் மூலம் எடை குறைவான தொலைக்காட்சி பெட்டிகள் வாடிக்கையாளர்களை கவர்ந்தன .பிறகு பிளாஸ்மா என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிவந்த டிவிக்கள் மக்களை அவ்வளவாக கவரவில்லை, அதனால் இந்த தொழில்நுட்பம் தோல்வி அடைந்தது, அதற்கு பிறகு அதன் அடுத்த வளர்ச்சியாக எல்லோரையும் கவரும் வண்ணம் மட்டுமல்லாமல், வாங்கவேண்டும் என்ற ஆவலையும் தூண்டிய தொழில்நுட்பம் தான் “எல்.சி.டி” தொழில்நுட்பம். பொதுவாக மடிக்கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பம் முதல்முறையாக தொலைக்காட்சி பெட்டிகளில் பயன்படுத்தப்பட்டது, இதன் மூலம் தெளிவான புள்ளிகள்,கோடுகள் இல்லாத கண்களை உறுத்தாத காட்சிகளை நாம் திரையில் காண முடிந்தது, மேலும் இதன் திரை வடிவமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தமையால் இந்த வகை டி.விக்களில் படம் பார்ப்பவர்கள் திரையரங்கத்தில் உட்கார்ந்து படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை பெற்றனர். அறிமுகப்படுத்திய புதிதில் இந்த வகை டி.விக்கள் விலை சுமார் 40,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தது, ஆனால் பல்வேறு கம்பெனிகளின் போட்டிகள் காரணமாக இந்த வகை டி.விக்கள் இப்போது 13,000 விலையிலிருந்தே கிடைக்கின்றன. இதுதான் இப்போது எல்லோருடைய விருப்பமான தொழில்நுட்பமாக இருந்துவருகிறது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தையும் சாப்பிடும் புதிய தொழில்நுட்பமாக “எல்.ஈ.டி” வகை தொழில்நுட்பம் தற்போது அறிமுகமாக உள்ளது. இது எல்.சி.டி. தொழில்நுட்பத்தின் அடுத்தவகையாகும்.
*இந்த எல்.ஈ.டி வகை டிவிக்கள் நாம் டிவி பார்க்கும் அனுபவத்தை இன்னும் மேம்படுத்தி காட்டக்கூடியதாக இருக்கும், குறிப்பாக நம் கண்களுக்கு சிறிதளவும் தீங்கு விளைவிக்காது,சோர்வு தராது, திரை கலர்புல்லாக, பளிச்சென்ற வண்ணங்கள் நம்மை வெகுவாக கவரும்.*இதன் திரை அளவு எல்.சி.டி வகை டி.விகளை விட பெரிதாக இருப்பதால் இதில் படம் பார்ப்பது ஒரு மினி திரை அரங்கமே நம் வீட்டில் இருப்பதை போன்ற உணர்வை தரும்* இதில் “WIRELESS” தொழில்நுட்பம் இருப்பதால் அதன் மூலம் இணையதள இணைப்பையும் எளிதாக பெறமுடியும். இதன் மூலம் நம் வீட்டுடிவியில் “INTERNET TV” சாத்தியமாகிறது.* மேலும் இந்தவகை டி.விக்களில் 100/200Hz Motion Plus” என்ற வேகமான காட்சி தொழில்நுட்பம் இருப்பதால் (கேம்ஸ்)விளையாட்டுகள், மற்றும் படங்களில் வரும் சண்டைகாட்சிகள்ஆகியவை நம் கண்களுக்கு தத்ரூபமாக காட்சியளிக்கும்.
மற்றும் வழக்கமாக எல்.சி.டி விக்களில் உள்ள வசதிகள் எல்லாமும் இதிலும் உள்ளது .இந்தவகை டிவிக்கள் இன்னும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை.., என்றாலும் இதன் ஆரம்பவிலை 125,000/- ரூபாயாக உள்ளது. கவலைப்பட வேண்டாம்…இந்தவகை டி.விக்கள் சந்தைக்கு முழுமையாக வரும்போது கம்பெனிகளுக்குள் போட்டிகள் வரும் அப்போது விலை கண்டிப்பாக குறைந்துவிடும்.அதுவரை பொறுத்திருப்போம்.
நன்றி : இப்படிக்கு சக்தி

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv