தனசிங் ஓ.எஸ் புதிய இணையத்தள உருவாக்க வழி !-சர்வதேச இணையத்தள புரட்சியில் புதிய மென்பொருள்

பாடசாலைப் பையன் முதல் பல்லுப்போன பாட்டிவரை ஆட்டிப்படைக்கும் இணையப் பக்கத்தை…

இன்றய உலகில் இணையம் பெற்ற வளர்ச்சி ஊடகத்துறையை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அதேவேளை இணையம் என்ற சாதனத்தை உள்வாங்கிய உலக மொழிகளில் தமிழ் தன்னிகரில்லா இடத்தையும் பெற்றுள்ளது.

புலம் பெயர்ந்த தமிழ் இளைஞர் உலகின் பல நாடுகளில் இருந்தும் இணையத்தில் சாதனைகளை முன் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாடசாலைப் பையன் முதல் பல்லுப்போன பாட்டிவரை ஆட்டிப்படைக்கும் இணையப் பக்கத்தை யாதொரு முன்னறிவும் இல்லாமல் உருவாக்கும் புதிய நிகழ்ச்சித் திட்டமொன்றை ஓர்டின் தனபாலசிங்கம், பிலிப் கிறீகர், ராஜேஷ் சேகர் ஆகியோர் வழங்குகிறார்கள். விரைவில் இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும். இது குறித்து வெளியாகியுள்ள தகவல் வருமாறு.

————————————————————————————————–

2010 ஆம் ஆண்டின் சர்வதேச இணையத்தள புரட்சியில் புதிய மென்பொருள் !

தனசிங்க் ஓ ஸ் ((ThanaSingh OS)) என்னும் புதிய ஒரு சொஃப்ட்வெர் (Software) இலகுவாகவும்
விரைவாகவும் html அல்லது php பற்றிய எந்தவித அறிவு இல்லாமலும் உங்களின்
விருப்பங்களிற்கேற்ப ஒரு இணையத் தளத்தை உருவாக்கிக்கொள்ள அமைக்கப்பட்டுள்ளது.
இத் தனசிங்க் ஓ ஸ் (ThanaSingh OS) என்னும் சொஃப்ட்வெர் (Software) இரண்டு வகைகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன ‘தனசிங்க் ஓ ஸ் ஹோம்’ (வுhயயெளுiபொ ழுளு ர்ழஅந) மற்றும்
‘தனசிங்க் ஓ ஸ் பிஸ்னஸ்’ (ThanaSingh OS Business). இவ் இரண்டு உருவேறுபாடுகளையும் நீங்கள் வருகின்ற ஆடி மாதம் 2010 இல் இருந்து இலகுவாக உங்கள் கணனியிலிருந்து பதிவிறக்கம் (download) செய்யலாம்.

தற்போது யேர்மனியைச் சேர்ந்த 80 பொறியியலாளர்களும் இந்தியாவைச் சேர்ந்த 30
பொறியியலாளர்களும் ஒரு கூட்டணியாக இணைந்து இவ் சொஃப்ட்வெரைப் பதிப்பு செய்கிறார்கள்.
இக் கூட்டணியில் ஈழத்தமிழர்களும் வட இந்தியத் தமிழர்களும் சேர்ந்து இவ் சொஃப்ட்வெரை
உருவாக்கி ஆடி மாதம் 2010 இல் வெளியிட இருக்கின்றார்கள். வெளியிடுவதற்கு முன்பே இவ்
சொஃப்ட்வெர் மேற்பார்வைக்கு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு அதே இந்தியாவிலும்
அமெரிக்காவிலும் விலையற்ற சொஃப்ட்வெராக (Free Software) பதிவு செய்யப்பட்ட பின்பு
அனைவராலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தப்படலாம்.

இத் தனசிங்க் ஓ ஸ் (ThanaSingh OS) சொஃப்ட்வெரின் மேலாளர்கள் ஓர்டின் தனபாலசிங்கம்
பிலிப் கிறீகர் மற்றும் ராஜேஷ் சேகர் ஆகியோர்.

மேலதிகமான தகவல்கள் தொடரும்.

https://webmail01.one.com/src/webmail.php

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv