கூடிய நிறை உள்ளவரே நீண்டகாலம் வாழ்கிறார்கள்


அதிக நிறை உள்ளவர்கள் அதிக காலம் வாழ்கிறார்கள் புதிய ஆய்வு !மெல்லியதாக இருந்தாலே நீண்ட காலம் வாழலாம் என்பது இதுவரை வைத்தியத்துறையினர் கூறிய ஆலோசனையாக இருந்து வருகிறது. ஆனால் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்று தேவையற்ற முறையில் திட்டமிட்டு மெலிந்து செல்பவர்களே முன்னதாக மரணத்தை தேடிக்கொள்கிறார்கள் என்று கூறுகிறது. ஜப்பானில் உள்ள ரோக்கியோ பல்கலைக்கழகம் 40 - 79 வயதுக்குட்பட்ட மொத்தம் 50.000 பேரை இந்த ஆய்விற்கு எடுத்துக்கொண்டது. இதில் பி.எம்.ஐ என்னும் சராசரி நிறை அளவிற்கு மேலான நிறை இருப்பவர்கள் மெல்லியதாக இருப்பவர்களை விட ஆறு முதல் ஏழு ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதேவேளை அளவுக்கு அதிகமான நிறை கொண்டவர்களும் நிறை குறைந்த மெல்லியவர்களை விட சில ஆண்டுகள் கூடுதலாகவே உயிர்வாழ்வதாகவும் அது தெரிவிக்கின்றது. மெல்லிய மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கிறது, காரணம் சகயீனத்தை தாங்க முடியாமை, புகைத்தல் போன்ற காரணங்களால் வரும் ஆபத்துக்களை எதிர்த்துவாழ மெல்லியவர்களின் இதயங்களால் இயலாமல் போகிறது என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள். எனவேதான் தமது உயரத்திற்கு ஏற்ற நிறையுடன் இருப்பது பாதுகாப்பானது என்றும் அது தெரிவிக்கிறது. உணவைக் குறைத்து மெலிவாக இருப்பதே அழகு என்று நினைக்கும் பலருக்கு இந்த ஆய்வு அதிர்ச்சியளிக்க இடமுள்ளது.


பழைய ஆய்வில் இருந்து.

அதேவேளை டென்மார்க்கில் நிறை கூடிய மனிதர்களின் தொகை வரவர அதிகமாகிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. வரும் 2020 ம் ஆண்டு மொத்த சனத்தெகையில் 15.7 வீதம் நிறை கூடியவர்களாகவே இருப்பார்கள் என்று டென்மார்க்கில் செய்யப்பட்ட முன்னைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டென்மார்க்கில் பி.எம்.ஐ அளவு 30 ற்குக் கூட இருப்பவர் 1987 ம் ஆண்டில் 6.2 வீதமாக இருந்தனர், இது 2005 ல் 11.5 வீதமானது, 2020 ல் 15.7 வீதமாக அதிகரிக்கும் என்றும் அது கூறுகிறது. இந்த ஆய்வு அதிக நிறை உள்ளவர்கள் 2 - 3 வருடங்கள் முன்னதாக இறப்பதாக கூறியிருந்தமை கவனிக்கத்தக்கது. மெல்லியதாக இருப்பவருக்கு இது ஆறுதலளிக்கும் செய்தியாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv