சிந்த‌னை செய்வ‌து ந‌ல‌ம்


தனது மகனுக்கும் , மகளுக்கும் , பேரனுக்கும் மத்திய அரசில் நல்ல பணம் சம்பாதிக்கும் இலாக்காக்க‌ளாக பெற வேண்டும் என்பதற்காக தனக்கு உடல் நலமற்ற நிலையிலும் கூட 2 நாட்களாக தில்லியிலேயே தங்கியிருந்து சோனியா காந்திக்கு கடும் நிர்ப்பந்தங்களை கொடுக்கிறார் கருணாநிதி; நான் கேட்ட இலாக்காக்களை கொடுக்காவிட்டால் மத்திய‌ அரசில் சேரமாட்டோம் என்று மிரட்டுகிறார்.
ஆனால், இதே கருணாநிதி, இல‌ங்கையில் வாழும் இலட்சக்கணக்கான தமிழர்களை காப்பாற்ற போர் நிறுத்த‌ம் வேண்டி, த‌மிழ‌க‌த்திலுள்ள‌ அனைத்துக் க‌ட்சிக‌ளும் ஒருமித்துக் குர‌ல் எழுப்பிய‌ போது, த‌ன‌து த‌ய‌வில்தான் ம‌த்திய‌ அர‌சு நீடிக்க‌ முடியும் என்ற‌ நிலையிலும் கூட‌ போர் நிறுத்த‌த்திற்காக‌ ம‌த்திய‌ அர‌சு மீது ஒரு சிறு நிர்ப்ப‌ந்த‌த்தை கூட‌ செலுத்த‌ முன்வ‌ர‌வில்ல‌. ம‌னித‌ச் ச‌ங்கிலி, ஊர்வ‌ல‌ம், உண்ணாவிர‌த‌ம் என‌ ம‌க்க‌ளை ஏமாற்றும் வ‌கையில் வெறும் நாட‌க‌ங்க‌ளையே ந‌ட‌த்தினார். இப்போது த‌ன‌து குடும்ப‌த்தின‌ருக்கு ப‌த‌விக‌ள் வேண்டும் என்ப‌த‌ற்காக‌, கூட்ட‌ணியை விட்டு வில‌குவோம் என்று மிர‌ட்டும் க‌ருணாநிதி, அன்று போர் நிறுத்த‌த்திற்காக‌ இதே அள‌வு க‌டுமையான‌ நிலையை மேற்கொண்டிருந்தால்
ஆயிர‌க்க‌ண‌க்கான‌ இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளை ம‌ர‌ண‌த்திலிருந்து காப்பாற்றியிருக்க‌லாம்; நூற்றுக்க‌ண‌க்கான‌ ப‌ச்சிளந் த‌மிழ்க் குழ‌ந்தைக‌ளை சாவின் பிடியிலிருந்து மீட்டிருக்க‌ முடியும்; இலட்சக்கணக்கான தமிழர்கள் தங்கள் வழ்க்கையை அழிவிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்; ஆனால், ஐய‌கோ.. க‌ருணாநிதி ஆயிர‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ளின் உயிர்க‌ளை காப்பாற்றுவதை விட த‌ன‌து ம‌க‌னுக்கும் ம‌க‌ளுக்கும் பேர‌னுக்கும் ப‌த‌விக‌ளை பெற்றுத்த‌ருவ‌தைத்தானே முக்கிய‌மாக‌ நினைத்திருக்கிறார். என் இனிய தமிழ் மக்களே..க‌ருணாநிதியை இன்ன‌மும் த‌ங்க‌ள் த‌லைவ‌ர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ அப்பாவித் த‌மிழ‌ர்க‌ளே ..கொஞ்ச‌ம் த‌னிமையில் சிந்தித்து பாருங்க‌ள். ஆயிர‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ள‌து உயிர்க‌ளை விட‌ த‌ன‌து ம‌க‌னுக்கும் ம‌க‌ளுக்கும் பேர‌னுக்கும் கிட‌க்கும் ப‌த‌விக‌ளும் ப‌ண‌மும் தான் முக்கிய‌ம் என்று நினைக்கும் க‌ருணாநிதி ஒரு த‌லைவ‌ரா.. கொஞ்ச‌ம் ம‌ன‌சாட்சியோடு சிந்தியுங்க‌ள்

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv