புகைத்தல் மூளைச்சேதத்திற்கு காரணமாகிறது !

புகைத்தல் மூளையை நேரடியாக பாதிக்கிறது !
மூளையை ஆரோக்கியப்படுத்தும் செல்லை கொல்கிறது புகை !

இந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வொன்று புகைத்தல் மூளை சேதமடைவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளதாக டென்மார்க் பொலிற்றிக்கன் எழுதியுள்ளது. இந்தியாவில் உள்ள மூளை சம்மந்தமான ஆய்வுக்கழகம் அடுத்த மாதம் வெளியிட இருக்கும் இந்த ஆய்வு மூளையை பாதிக்கும் பெரு வியாதிகளுக்கு புகைத்தல் பிரதான காரணியாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை முன்வைக்க இருக்கிறது. புகைத்தல் நரம்பு மண்டலத்தின் மையக்கட்டுப்பாட்டுப் பகுதியை இது நேரடியாக தாக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். மதுபானம் மூளை நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்காது ஆனால் புகைத்தல் பாதிக்கும் என்றும் தெரிவிக்கிறது. மூளையில் உள்ள தீமை பயக்கும் செல்களை அழிக்கவல்ல மிக்ரோக்ளியா என்ற செல்களை புகைத்தல் அழிப்பதால் மூளையின் செல்களுக்குhய எதிர்ப்புச்சக்தி அழிக்கப்படுகிறது. அத்தோடு புகைத்து ஊதும் புகை வழிமண்டலத்தில் கலந்து புகைக்காதவரின் மூளைச் செல்களையும் அழிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். சுவாசத்திற்கு மட்டுமல்ல மூளைக்கே ஆபத்தான புகைத்தலை விட முடியாது தவிக்கும் மக்கள் கோடான கோடி உலகில் உண்டு. புகைத்தலால் அழிவோர் நாடுகளில் டென்மார்க்கும் சிறப்பிடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv