சூரிய ஒளியில் சார்ஜ் செய்யும் வசதி: சாம்சங் மொபைல் போன் அறிமுகம்

சூரிய ஒளி மூலம் சார்ஜ் செய்யும் வகையில் புதிய மொபைல் போன்களை, சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. மின்சார வசதி இல் லாத, அடிக்கடி மின் தடை ஏற்படும் கிராமப் பகுதிகளில் பயன்படுத்தும் வகையில், சூரிய ஒளியிலிருந்து பேட் டரியை சார்ஜ் செய்து கொள் ளும் வகையில் புதிய மொபைல் போனை, சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது


. இந்த மொபைல் போனுக்கு, "சோலார் குரு' என்று பெயரிடப் பட்டுள் ளது. சூரிய ஒளி படும் எந்த இடத்திலும் இந்த மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். இம்மாத மத்தியில் இந்த போன்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. சாம்சங் நிறுவனம் வெளியிட்டு வரும் குறைந்த விலை, "குரு' வகை மொபைல் போன்களின் அடிப்படையில், இந்த சூரிய ஒளி மொபைல் போன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படு கின்றன. இதன் விலை 2,799 ரூபாய். இந்த வகை மொபைல் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவிலேயே விற்பனையும் செய்யப்படுகின்றன. நொய்டா தொழிற்சாலையில் இந்த மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சூரிய ஒளி மொபைல் போன்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் படும்.


அதைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே தயாரான சூரிய ஒளி மொபைல் போன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஏற்கனவே, சீனாவைச் சேர்ந்த இசட்.டி.இ., நிறுவனம், "கோரல்-200-சோலார்' என்ற சூரிய ஒளி மொபைல் போனை விற்பனை செய்து வருகிறது. இதே போல, ஜப்பானைச் சேர்ந்த ஷார்ப் நிறுவனம், "எஸ்.எச்.002' என்ற சூரிய ஒளி மொபைல் போனை, ஜப்பான் சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

1 கருத்துரைகள்:

Anonymous said...

HI

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv