வங்கி அட்டை மோசடிகளை தவிர்க்க பத்து ஆலோசனைகள் !-


கோடை விடுமுறை நெருங்குவதால் பலர் வெளிநாடுகளுக்கு புறப்படுவதற்கு அவசர அவசரமாக தயாராகி வருகிறார்கள். வருடாந்தம் வெளிநாடு செல்வதும், வீசா காட் மோசடியில் சிக்குண்டு நொந்து நூலாகித் திரும்புவதும், விடுமுறையே சோகமாகிப் போவதும் பலருடைய வாழ்வாக இருக்கிறது. இந்த நிலையில் வங்கி அட்டைகளை பாவிப்பது தொடர்பாக பத்து எச்சரிக்கைகளை டென்மார்க் பொலிற்றிக்கன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

01. வங்கி அட்டையின் பின் கோட்டை ( இரகசிய இலக்கம் ) யாருக்கும் தெரியாத விதத்தில் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். எக்காரணம் கொண்டும் வங்கி அட்டையோடு இரகசிய இலக்கத்தையும் இணைத்து வைக்கக் கூடாது.

02. எப்போதும் நீங்கள் செலவிடும் பணத்திலும், வங்கி இருப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

03. வீசா அட்டையில் எடுக்கும் பணத்தின் அளவை 30 தினங்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

04. வங்கி அட்டை தொலைந்துவிட்டால் தடுமாறாமல் இன்னொரு வங்கி அட்டையும் வைத்திருப்பது நல்லது.

05. வீசா அட்டையை வெளிநாடுகளில் உள்ள பல தானியங்கிகள் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே அதற்கு அமைவாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்ரர் காட் போன்றவற்றையும் வைத்திருக்கவும்.

06. வீசா அட்டை என்றால் என்ன, அதில் உள்ளடங்கிய விடயங்கள் யாவை என்ற அடிப்படை விடயங்களை பயணம் புறப்பட முன்னர் அறிந்து வைத்துக்கொள்ளவும்.

07. வெளளிநாடுகளில் வீசா அட்டையை பாவிக்க ஒரு தடவைக்கு 30 வரை கொடுப்பனவு கொடுக்க வேண்டும்.

08. வீசா அட்டையை வெளிநாடுகளில் கொடுத்து அந்த நாட்டு நாணயங்களுக்கு பணத்தை மாற்றி எடுக்கும்போது பல நாடுகளில் அதிக பண இழப்பு ஏற்படும்.

09. உள்நாட்டில் பாவனைப்படுத்தும்போது ஒரு வீத கட்டணம் எடுக்கும் வங்கிகள் வெளி நாடுகளில் பயன்படுத்தினால் 1.5 வீதம் கட்டணம் அறவிடும்.

10. ஆசிய நாடுகள் சென்று வீசா அட்டையை பயன்படுத்தியிருந்தால் நாடு திரும்பியதும் புதிய அட்டை எடுப்பது புத்திசாலித்தனம்.

என்று பத்து ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளது.


நன்றி -அலை

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv