உயர்ந்த ஒன்றாகி

உயர்ந்த மலையொன்றுடன்
பரபரத்த மனசொன்று
முட்டி மோதி வீழ்கிறது
உயர்ந்த மலையொன்று
மனமாகிறது இங்கே
உயர்ந்த எண்ணங்களோடு
போட்டியிடுகின்றன எதிர்கொள்பவை.
சொல்லத்தான் வேண்டும்
நீங்கள் இருப்பதை.
விஜயம் என்னவென்றால்
மனதுக்கு சொல்லி முடியாத
அலைச்சல்.
எப்போதும் துணை புரிய
நானிருக்கிறேன் என்றது ஒளிவட்டம்
எதுவும் இங்கே
அடையாளங்களோடு
சொல்லப்படுகின்றது.
நீ யார் உனக்கு என்ன
நீ எங்கே
எல்லாம் விசாரித்த பின்
வசதியாய் மனதில் நிற்க
ஒரு வேலையுடன் வருகின்றாய் நீ
எதிர்கொள்ளும் விஜேசங்களில்
ஞாபகங்களுடன் விளையாடும்
உறவுகள்.
உயர்ந்த ஒன்றாகி
நிற்கிறாய் நீ.

3 கருத்துரைகள்:

Anonymous said...

நீங்கள் சினிமா பாடல்களுக்கு பதிலாக எங்கள் விடுதலை பாடல்களை பயன்படுத்தலாமே?
எங்களுக்காக அல்லவா மடிந்தவர்கள் மாவீரர்கள். நாங்கள் அவர்களை மறக்கலாமா?
நன்றி_ ஈழம் பிரபா.

Anonymous said...

நீங்கள் சினிமா பாடல்களுக்கு பதிலாக எங்கள் விடுதலை பாடல்களை பயன்படுத்தலாமே?
எங்களுக்காக அல்லவா மடிந்தவர்கள் மாவீரர்கள். நாங்கள் அவர்களை மறக்கலாமா?
நன்றி_ ஈழம் பிரபா.

Thaaham said...

உங்கள் பதிவுக்கு நன்றி -உங்கள் கருத்து பரிசீலிக்கப்படும்.

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv