தண்டவாளத்தில் படுத்தும் உயிர் தப்பிய பெண்மணி

தற்கொலை. முட்டாள்தனமான முடிவு என்பது சிலரின் கருத்து. உலகிலிருந்து விடுபட துணிச்சலான முடிவு என்பர் சிலர். தற்கொலை செய்து கொள்பவர்கள் சுயநலவாதிகள் என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு. தற்கொலை செய்து கொள்பவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி காரணங்கள். ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு காலகட்டத்தில் தற்கொலை எண்ணத்தில் உளன்று இருப்பார். இதைப்போன்றதொரு தற்கொலை முயற்சி வீடியோவை யூடுப் தளத்தில் பார்க்க நேர்ந்தது. இஸ்ரேலை சேர்ந்த 56 வயது பெண்மணி, தான் வேலை பார்த்து வந்த டிராவல் ஏஜென்சியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை முடிவை எடுத்து உள்ளார். அவர் ரயில் வரும் நேரம் பார்த்து தண்டவாளத்தில் படுக்கிறார். மிகவும் அதிர்ஷ்டகரமான(?) , வியப்பான விஷயம் ரயில் கடந்ததும் எழுந்து சென்று விட்டார். போலீஸார் அவரை கைது செய்து விட்டனர். மரணத்தின் வாயில் கதவை தட்டி விட்டு திரும்புவது இதுதானோ? அங்கிருந்த கண்காணிப்பு கேமெராவில் இந்த காட்சி பதிவாகி உள்ளது. அதிர்ச்சியூட்டிய வீடியோ இது .

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv