நாம் நம் கண்களை நன்றாக பாதுகாக்க...


இன்றைய காலக்கட்டத்தில் கணினியின் அவசியம் மிகவும் இன்றியமையாதது. இன்று எல்லா துறைகளிலும் கணினி புகுந்து விட்டது. அதனால் இன்று வேலை செய்பவர்கள் காலையில் முதல் மாலை வரை கணினி முன் உட்கார்வது தவிர்க்க முடியாதது. அதனால் உடம்பில் மற்ற உறுப்புகளை விட நமது கண்கள் தான் அதிகமாக வேலை செய்கிறது. ஆனால் நாம் நமது கண்களை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் நாம் தெரிந்தே கண்களை கெடுத்து கொள்கிறோம்.ஆனால் நமது வேலை செய்யும் நேரத்தில் சிறிது நேரத்தை பயன்படுத்தி சின்ன சின்ன கண்பயிர்ச்சிகள் செய்வதன் மூலம் நாம் கண்களை நன்றாக பாதுகாக்க முடியும். இந்தபயிர்சிக்கு பெயர் "20 - 20 - 20".1. முதலில் 20 நிமிடத்திற்கு ஒருமுறை உங்கள் கவனத்தை கணினியிலேருந்து திசை திருப்பி 20 அடி தொலைவிலுள்ள பொருளை உற்று பார்கவேண்டும். இதனால் அசதியான உங்கள் கண்கள் புத்துணர்ச்சி பெரும்.2. அதேபோல் 20 முறை கண்களை தொடர்ச்சியாக சிமிட்டவேண்டும். இதனால் உங்கள் கண்களின் ஈரபசப்பு தன்மை குறையாமல் இருக்கும். மேலும் கணினியால் ஏற்படும் கண்ணெரிச்சல் குறையும்.3. அதெபோல் 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரே இடத்தில் உட்காராமல் எழுந்து சிறிது தூரம் நடக்கவேண்டும். இதனால் உங்கள் உடம்பிற்கு சீரான இரத்த ஓட்டம் ஏற்படும்.இவ்வாறு நீங்கள் "20 - 20 - 20" பயிற்சியை நடைமுறை படுத்தினால் நிச்சயமாக் கண்களை பாதுகாத்து கொள்ள முடியும். இவ்வகை பயிற்சி எளிதாக இருந்தாலும் பழகத்திற்கு கொண்டு வருவது சிரமம்தான் ஆனால் முயற்சி செய்தால் நன்மை நமக்குதான். பின்குறிப்பு:இந்த பதிவிற்கும் மேலே உள்ள படத்திற்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் நினைக்கலாம் . ஆனால் சம்பந்தம் இருக்கு , இந்தப்படம் உங்கள் கண்களுக்கு இரண்டு இரண்டாக தெரிந்தால் உங்க கண்ணு நல்ல கண்ணு. ஆனால் ஒழுங்காக தெரிந்தால் நல்ல கண்மருத்துவரை பாருங்கள்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv