அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு.


1906ம் ஆண்டிற்குப் பின்னர் நோபல் பரிசு பெறும் அமெரிக்க அதிபர்.வெள்ளை மாளிகைக்குப் போன கறுப்பருக்கு நோபல் பரிசு கிடைப்பது உலக அதிசயம்.


நோபல் பரிசுக் குழுவினர் இந்த ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பெறுகிறார் என்று சற்று முன்னர் அறிவித்துள்ளனர். இந்தச் செய்தி வெள்ளை மாளிகையில் பலத்த இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் தெரிவித்தார். இப்படியொரு பரிசு தனக்குக் கிடைக்குமென கனவிலும் எதிர்பாராத அமெரிக்க அதிபர் விவரிக்க முடியாத உணர்வலைகளில் சிக்குண்டார். கடந்த 1906ம் ஆண்டு அமெரிக்காவின் இளம் அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்டிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. அதைத் தொடர்ந்து 1919 ற்குப் பின் ஏறத்தாழ சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கடந்து அமெரிக்க அதிபர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.


பராக் ஒபாமா உலக சமாதானத்திற்காக சர்வதேச நாடுகளுடன் இணக்கப்பாடான நிலைப்பாட்டை எடுத்து அமைதியை நோக்கி உலகத்தை நகர்த்துவதற்கான பாதையைத் திருப்பியதற்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ் போல போருக்கு முக்கியம் கொடுக்காமல், பொருளாதாரத்திற்கும் சமுதாய நல வாழ்விற்கும் ஒபாமா கொடுத்திருக்கும் முக்கியமே உலகில் போர்களின் வெப்பியாரம் தணிய முக்கிய காரணமாக அமைந்தது என்று நோபல் பரிசுக்குழு கோடிட்டுக் காட்டியுள்ளது.


இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 ம் திகதி இப்பரிசும் அதற்கான காசோலையும் இவருக்கு வழங்கப்படும். இம்முறை நோபல் பரிசுக்குழு பல காத்திரமான முடிவுகளை எடுத்திருக்கிறது. நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசை வழங்கியபோது சர்வாதிகாரி ஹிட்லரின் அநீதிகளை எதிர்த்து நூல் எழுதிய எழுத்தாளருக்கு வழங்கியிருந்தது. அதேபோல ஒரு தமிழருக்கும் நோபல் பரிசு வழங்கியிருந்தது.


கடந்த தை 20ம் திகதி முறைப்படி அதிபராக பொறுப்பேற்ற பராக் ஒபாமா அதற்குள் உலக சமாதானத்திற்கான பணிகளை ஆற்றிவிட்டாரா என்பது முக்கிய கேள்வியாகும். ஆனால் அவர் அமெரிக்க அதிபர் புஸ்சின் வழியில் நடக்க மறுத்திருப்பதே நோபல் பரிசுக்கு போதிய தகுதி என்றே கருதப்பட்டிருக்கிறது.


அது மட்டுமல்லாமல் வருங்காலங்களில் சமாதானத்திற்கு விரோதமான போர் மனம் கொண்ட நடவடிக்கைகளை ஒபாமா தவிர்த்து நடக்க இது சரியான மூக்கணாங் கயிறாகவும் இருக்கிறது. ஒபாமாவிற்கு கிடைத்த சமாதானத்திற்கான நோபல் பரிசு இனி அவர் ஏற்படுத்தப் போகும் சமாதானப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பரிசு என்பதே உண்மையாகும்.


01. ஈராக்கில் இருந்து அமெரிக்கப்படைகளின் முற்றான வெளியேற்றம்.

02. ஆப்கான் போருக்கு முடிவும் அமைதியும்.

03. பாகிஸ்தானில் வெடிக்கவுள்ள போரை தடுத்து அமைதிப்படுத்தல்.

04. வடகொரியாவை அணுகுண்டு வெடிப்பில் இருந்து தடுத்து அமைதிப்படுத்தல்.

05. ஈரானை படியிறங்கி வரச்செய்து அணு குண்டு வெடிப்பை தடுத்தல்.

06. புவி வெப்பமடைவதைத் தடுக்க அமெரிக்காவின் அதிக பட்ச ஆதரவை வழங்குதல்.

07. வெப்பம், காலநிலை மாற்றங்களால் அழிவடையப்போகும் ஏழை ஆபிரிக்க, ஆசிய நாடுகளை காப்பாற்ற பெருமனது கொண்டு பாடுபடல்.

08. போரற்ற புதிய உலக சமுதாயமொன்றை ஏற்படுத்தல்.

09. செல்வாக்கிழந்த ஐ.நாவிற்கு ஒரு புதிய மதிப்பை ஏற்படுத்தல்.

10. சிறீலங்கா போன்ற இனத்துவேஷத்தில் நிலை தடுமாறி தோல்வியடைந்த நாடுகளில் உண்மையான அமைதியை ஏற்படுத்தல்.

11. பொருளாதார மந்தத்தில் இருந்து உலகை மீட்கப் பாடுபடல்.

12. மத்திய கிழக்கில் அமைதி சர்வதேச பயங்கரவாதத்திற்கு

ஓய்வு


என்ற 12 பிரதான பணிகளையும் ஒழுங்குபட நடாத்த வேண்டுமானால் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற பட்டம் ஓர் அமெரிக்க அதிபரிடம் இருப்பது அவசியம். அந்தவகையில் இம்முறைதான் நோபல் குழு தனது எண்ணங்களை உருப்படியாக வடிவமைத்து செயற்பட்டுள்ளதெனலாம். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒருவருடைய கடமை என்ன சிந்தித்தால் இந்தப்பரிசு சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவு என்பது தெரியவரும். வெள்ளை மாளிகைக்கு அதிபராக ஒரு கறுப்பர் போனது உலக அதிசயம், அதே கறுப்பர் ஆண்டு ஒன்றுக்குள் நோபல் பரிசு பெற்றது அதைவிட அதிசயம்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv